search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய நிலங்கள் நாசம்"

    வேடசந்தூர் பகுதியில் கஜா புயலால் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விசாய நிலங்கள் நாசமடைந்தன. #GajaCyclone
    வேடசந்தூர்:

    நாகப்பட்டினம் அருகே கரையை கடந்த கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்திலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் சூறைக் காற்றுக்கு பயிர்கள் நாசமடைந்தன.

    வேடசந்தூர் அருகே வடுகம்பாடி, புளியம்பட்டி, சுப்பிரமணியபிள்ளை புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை சாகுபடி செய்தனர். சூறைக்காற்று பலமாக வீசியதால் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.

    எரியோடு அருகே நாகையன்கோட்டை, பாகாநத்தம் ஆகிய பகுதிகளில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கண்வலி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது கஜா புயலால் கடும் சேதமடைந்துள்ளது.

    இதே போல் வடமதுரை பகுதியில் கரும்பு, வாழை சேதமடைந்தன. குஜிலியம்பாறை பகுதியில் கரிக்காலி, கூம்பூர், கோம்பை, வடுகம்பாடி குளம் உள்ளிட்ட இடங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது.

    குச்சிக்கிழங்கு, 15 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வாழை, உள்ளிட்டவை சேதமடைந்தன. மேலும் பல வீடுகளில் மேற்கூரைகள் பறந்து பொதுமக்கள் வீடு இன்றி தவித்து வருகின்றனர். மேலும் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளதால் பல இடங்களில் பொதுமக்கள் இருளில் சிரமப்பட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை துரிதமாக செயல்பட அறிவுறுத்தினர். இதே போல் அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். ஆசையாக வளர்த்த தென்னை மரங்கள் மற்றும் வாழைகள் நாசமடைந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #GajaCyclone
    ×